இலுப்பை மரம்

இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். கிளையின் நுனியில் கொத்து கொத்தான இலைகள் கொண்டது. முட்டை வடிவ கனியின் உள்ளே சதை பற்றுடன் இருக்கும் விதையை, ஓடு போர்த்தி இருக்கும். பார்ப்பதற்கு பிறையின் வடிவத்தை போன்று இருக்கும். இதன் மலர்கள் மணத்துடன் வெள்ளை நிறத்தில் பூக்க கூடியது.
இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்தும் மருத்துவ பயன் உடையது. இலுப்பை பூ நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்க கூடியது. காமத்தை அதிகரித்து பசியுண்டாக்கும். இதன் விதை நோய்களை நீக்கி உடலை தேற்றும். நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். இலுப்பை இலையை பெண்கள் மார்பகத்தில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு மிகும். இலுப்பை பூ 50 கிராம் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி வடிகட்டிக் காலையில் மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மது மேகம் குணமாகும்.

மரத்தின் பயன்கள்

மரத்தின் உள்பாகம் மிகவும் உறுதி உடையது. குளக்கரையிலும் தரிசு நிலங்களிலும் இலுப்பையை நட்டு வளர்க்க முடியும். வெறும் வழிபாடுகளுக்கு மட்டுமல்லாமல் மருத்துவப் பயன்பாட்டிற்குப் பயன்படும் அருமையான மருத்துவ குணம் கொண்ட மருந்து இலுப்பை எண்ணெய்.

பூவை குடிநீராக்கி காலை மாலை 30 மிலி அளவில் கொடுக்க தொடர் இருமல் தீரும். அடங்காத தண்ணீர் தாகம் அடங்கும்.
இதன் விதையில் இருந்து எடுக்கப்படும் நெய் இலுப்பை எண்ணெய் என அழைக்கப்படும். இதைக் கொண்டு விளக்கு எரிப்பதால் கண்கள் பிரகாசமடையும். அறிவுத் தெளிவு ஏற்படும். இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி , நரம்பு தளர்ச்சி முதலியவை தீரும். 10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டு அரைத்து 50 மிலி தண்ணீரில் கலக்கி நஞ்சு சாப்பிட்டவர்க்கு கொடுக்க வாந்தியுண்டாகும் நஞ்சு வெளியாகும்.
எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும். பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர்.
இலுப்பை மரங்களை கோயில்களில் வளர்பதற்கு காரணங்கள் உண்டு. இதன் எண்ணெய் நீண்ட நேரம் எரிந்து வெளிச்சத்தை கொடுக்க கூடியது. விளக்கு எரியும் காலங்களில் ஏற்படும் புகையால் வீட்டில் நஞ்சு உள்ள சிறு பூச்சிகள் ஓடிவிடும். மனம் அமைதியடையும். இந்த மரம் காய்ந்த பிறகு இரும்பை போன்று வலிமையானதாக மாறிவிடும் என்பதால் இந்த மரத்தின் பாகங்களிலிருந்து தான் கோயில் தேரின் அச்சு உட்பட முக்கியமான பாகங்களை உருவாக்குவார்கள்.

மருத்துவப் பயன்கள்

கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலுப்பைப்பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச்செய்யும்; தும்மலுண்டாக்கும்.

courtesy: Facebook