மருத மரம்

மருத மரம் (Terminalia arjuna) இந்த மரம் இந்தியாவில் வளரக் கூடிய மரமாகும். எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும் ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும்.
அர்ஜுனா மரத்தின் மரப்பட்டையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் மூலிகைக்காகப் பயன்படுத்துகிறார்கள். கோ -என்சைம் கே -10, டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில் மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன.

மருத்துவ பயன்கள்

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை போன்றவை கட்டுக்குள் வரும்.

மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.
ஆண்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம் பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.
தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும். ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.
மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராகத் தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்தக் குழாய்களில் கொழுப்பு அதிகமாகப் படிவதும் தடுக்கப்படும்.