மகிழம் மரம்

மகிழம் மரம் (Mimusopelengi ) பூவின் மணம் மகிழ்விப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.
மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி (வகுளம் இலஞ்சி மகிழமரமென்ப – சேந்தன் திவாகரம்) ஆகும்.இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான மிமுசாப்ஸ் இலஞ்சி (Mimusops elengi: Sapotacea – தாவரக் குடும்பம்) என்பதில் சிற்றினப் பெயராகச் சேர்க்கப்பட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
மார்ச் முதல் ஜூன்வரை பூக்கும் கோட்டு மலரான மகிழம்பூ சிறியது, அழகிய அமைப்புடையது, மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது, மிகுந்த மணமுடையது. இந்த மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார்  திருத்தக்கதேவர். மலரில் அதிகத் தேன் காணப்படும். இந்தப் பூ சுழன்று வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட  இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்றும் திருத்தக்கதேவர் கூறுகிறார் .
மகிழம், ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மரம். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று.

மருத்துவ பயன்கள்

மகிழ மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்து வர, மனதுக்கு இதமளிக்கும் குளுமையான சூழலில், ஆழ்ந்த உறக்கம் வரும். உடல் அசதிகள் மற்றும் உடல் சோர்வு நீங்கி, மனம் புத்துணர்வாகும், மேலும், மகிழ மரத்தின் காற்று, உடலின் இயக்கத்தைச் சீராக்கும் தன்மைமிக்கது.

மகிழம் மிகவும் பயன் தரும் ஒரு மரம். மகிழ மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் பயன் நல்குகின்றன.
மகிழ மரங்கள், வீடுகளில், பூங்காக்களில் மற்றும் சுற்றுலா மையங்களில், இவற்றின் அற்புத நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும், நிழல் தரும் தன்மைக்காகவும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மகிழ மரங்கள் வெப்பமான வெளிப்புறத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை மிக்கவை, காற்றில் உள்ள தூசு நச்சுக்களை வடிகட்டி, நல்ல காற்றை அளித்து, சுற்றுச்சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்கவை.
நறுமணத்தை முகர்ந்தாலே, மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் வழங்கக்கூடிய மகிழ மலர்கள், உடல் வலிமைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலைக் குளிர்வித்து, உடல் நச்சுக்களைப் போக்கும் வல்லமை மிக்கது, பல் வியாதிகள் தீர்வில் மகிழ மர இலைகள் : கருவேலம் தூளில் தினமும் பல் துலக்கி, அதன் பின்னர், மகிழ மரத்தின் இலைகளைக் காய்ச்சிய நீரில், வாய்க் கொப்புளித்து வர, பல் தொடர்பான வியாதிகள் மற்றும் ஈறு பாதிப்புகள் அகலும். மகிழம் காயை வாயில் இட்டு மென்று துப்ப, பல் ஆட்டம் நீங்கும். உடல் வலிமைக்கு : மகிழ மலர்களின் மனதை மயக்கும் நறுமணம், திருமணமான தம்பதியரின் அன்னியோன்யத்தை அதிகரிக்கும் தன்மைமிக்கது. மகிழ மலர்களைப் பாலில் இட்டுக் காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்துப்பருகி வர, உடல் வலிமையாகும்.
வயிற்றுப் போக்கு : மகிழ மரப் பழங்களைச் சாப்பிட, வயிற்றுப்போக்கு, கட்டுப்படும். மகிழ மர விதைகளை அரைத்து, வெண்ணெய்யில் கலந்து சாப்பிட, உடல் சூடு குறையும்.
ஆண்மை மற்றும் கருப்பை பிரச்சனை : ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். மகிழ மரத்தின் பட்டைகள், உடலை வலுவாக்கும், பெண்களின் மாதாந்திர பாதிப்புகளைச் சரியாக்கும்.
தூக்கமின்மை : மகிழ மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்து வர, மனதுக்கு இதமளிக்கும் குளுமையான சூழலில், ஆழ்ந்த உறக்கம் வரும். உடல் அசதிகள் மற்றும் உடல் சோர்வு நீங்கி, மனம் புத்துணர்வாகும், மேலும், மகிழ மரத்தின் காற்று, உடலின் இயக்கத்தைச் சீராக்கும் தன்மைமிக்கது. இரவில் தூக்கம் வராதவர்கள், கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற, நல்ல உறக்கம் வரும்.
மகிழம்பூ தே நீர் : சிறிது மகிழம் பூக்கள் அத்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து, நீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி, அந்த நீரை, தினமும் இரவு உறங்கும் வேளையில் பருகி வர, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம், உண்டாகும்.