பெருநெல்லி மரம்
நெல்லிக்காய் சிறிய அல்லது நடுத்தர உயரமான, இலையுதிர்க்கும் மர வகையைச் சார்ந்தது.நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. நெல்லி இலைகள் புளியன் இலையை விட சிறியவை. இறகு வடிவமானவை. நெல்லி கிளைகள் இறகு போன்ற தோற்றமுள்ளவை. இம்மரம் வறட்சியிலும் தாக்குப் பிடித்து அதிக விளைச்சலைக் கொடுக்கும். இந்தியப் பெண்மணிகள் நெல்லிக்காயை ஆரோக்கியத்தின் சௌபாக்கியம் என்றும் ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளது. கர்ப்பிணிகள் முதலிலிருந்து 9 மாதம் வரையில் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நெல்லிக்காய் அல்லது அந்த அளவு நெல்லி முள்ளி உட்கொண்டால், அந்தச் சமயத்தில் ஏற்படும் வாந்தி நின்று நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவதனால் இரும்பும் சுண்ணாம்பும் சரீரத்துக்குச் சேர்ந்து கர்ப்பிணிகள் ஆரோக்கியம் முள்ளவர்களாகிறார்கள். ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
மருத்துவ பயன்கள்
- நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்துக் கலந்து குடித்தால், நல்லது.
- நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
- நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
- நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனைத் தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையைச் சரிசெய்துவிடலாம்.
- நல்ல நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்துக் குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- சிலருக்குச் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
- கோடைக் காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.
- மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தபோக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம்.
- முகம் நன்கு அழகாகப் பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
- உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
- இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.
- நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.
- நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.
- நெல்லிக்காய் சாறு உடலில்உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.
இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பு கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை. வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது.
சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.