சரக்கொன்றை மரங்களால் விளையும் நன்மைகள்!

கோடைகாலத்தில் நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுபவை பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள். சரக்கொன்றை சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் கொன்றையை குறிப்பிடப்பட்ட பாடல்களில் இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. ஊர்ப்புறங்களிலும் சாலையோரங்களிலும் அழகிற்காக நட்டு வைத்து வளர்பதும் உண்டு. கோடையில் (ஏப்ரல்-மே மாதங்களில்) பூ பூக்கத்தொடங்கும். அதற்கு சற்று முன்னதாக இலைகளை உதிர்க்கவும் ஆரம்பிக்கும். சில நேரங்களில் இலையில்லாமல் மரம் முழுவதும் மஞ்சள் பூக்களை மட்டுமே கொண்டிருக்கும். அழகு என்றால் அதுதான் அழகு.
கேரளப் பண்டிகையான “விஷு” அன்று கொன்றை மலர்களை வைத்து பூசை செய்வார்கள் கேரள நாட்டினர்.இலத்தீன் மொழியில் fistula எனில் நீண்ட குழலைக் குறிக்கும். இதன் நீண்ட குழல் போன்ற கனியை வைத்தே இப்பெயர். இந்தக் கனி முதலில் பச்சை நிறத்திலும், முதிர்ந்தவுடன் கருப்பு நிறத்திலும் இருக்கும். அதை ஆட்டும் போது உள்ளிருக்கும் விதைகள் அசைந்து கல கல வென ஓசையெழும்.க்கனியின் வெளியுறை மிகவும் கடினமாகவும், உள்ளே சிறு சிறு அறைகளாக பிரிக்கப்பட்டு அதனுள் ஒரு விதையும் இருக்கும். இந்த நீண்ட கனியை உடைத்தால் ஒவ்வொரு அறையிலும் கருப்பு நிறத்தில் பிசின் போன்று ஒட்டக்கூடிய பழச்சதை (Pulp) இருக்கும்.

வளர்ப்பு

கொன்றை கேரளாவின் மாநில மலர் ஆகும். இதன் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இம்மரம் 20 ரூபாய் தபால் தலையாக வெளியிடப்பட்டுள்ளது. பொன் பொழி. மரப்பூ தாய்லாந்தின் தேசிய மலராகும். இது தாய்லாந்தின் அரச கம்பீரத்தை குறிக்கும் விதமாக உள்ளது. 2006 -2007 நடைபெற்ற மலர் கண்காட்சியில் இத் தாவரம் அரசரது உரிமை பெற்ற ஒரு தேசத்தின் தாவர வகை ராகஸாபுரூக்கி எனப்பட்டது. இது பூத்துக் குலுங்கும் விதம் பொதுவாக டாக்கூண் என்று அழைக்கப்படுகிறது.

கே. பிஸ்டூலா சிறப்பு அம்சமாக 2003 ஆம் ஆண்டில் கனடா மற்றும் தாய்லாந்து 48 செண்ட் தபால் தலை வடிவமைத்து வெளியிட்டது. இதன் மூலம் தேசிய சின்னம் உருவாவதற்கு முக்கியத்துவம் பெற்றது

சரக்கொன்றை மரத்தின் பட்டை, வேர், காய், இலை,கொழுந்து  என அனைத்துமே மருத்துவகுணம் நிரம்பியவை. சரக்கொன்றைக் காயின் உட்பகுதியையும், மேல் தோலையும் வாய்ப் புண்ணுக்கு வாய்க் கொப்பளிக்கும் மருந்தாகவும், வயிற்றுவலிக்கு லேகியமாகவும் பயன்படுத்தி வந்தார்கள். மரத்தின் இலையை துவையல் செய்து சாப்பிடலாம். கீரையைப்போல் கடைந்தும் உணவோடு சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு வலிமை சேரும். சோர்வு நீங்கும். உடலை பல்வேறு கொடிய நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.
மூளைக்காய்ச்சலுக்கு சரக்கொன்றை மரத்தின் இலை சிறந்த மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இலைக்கொழுந்தை சாப்பிட்டால் குடலில் உள்ள பூச்சிகள் மலத்தோடு வெளியேறும். பூவை அரைத்து பாலோடு சேர்த்து குடித்தால் வெள்ளை வெட்டை மற்றும் காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.
அஜீர்ணக் கோளாறு, வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, கை, கால்கள் ஜில்லென குளிர்வதை தடுக்கவும், படர் தாமரை, வண்டுக்கடி, தேமல், சொறி, சிரங்கு போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் சரக்கொன்றை மரத்தின் பட்டையும், வேர் பட்டையும் பயன்படுகின்றன. பொதுவாக சரக்கொன்றை மரம் நாள்பட்ட கட்டிகளை குணமாக்கி, தொண்டை புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. யுனானி மருத்துவத்தில் தொண்டை நோய் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. சரக்கொன்றை மரத்தின் பழம், புளியம்பழத்தைப்போன்றே இருக்கும்.இது சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும்.
சரக்கொன்றை பழத்தின் சதைப்பகுதியை கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மலமிளக்கியாக அளிக்கப்பட்டது. பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியது.
மனசுக்கு இனிமையையும், சந்தோஷத்தையும் தரக்கூடியது சரக்கொன்றை மரம்.

மருத்துவ பயன்

ஆயுர்வேத மருத்துவத்தில், தங்க மழை மரம் “அரக்வதா” என்று அழைக்கப்படுகிறது, அதாவது “நோயாளியின் கொலையாளி”. பழம் கூழ் ஒரு சுத்திகரிப்பு என கருதப்படுகிறது, மற்றும் சுய மருத்துவ அல்லது மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எந்த பயன்பாடு கடுமையாக ஆயுர்வேத நூல்களுக்கு எதிராக அறிவுறுத்தப்படுகிறது. இது ஆயிரம் ஆண்டுகளாக மூலிகைப் பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், நவீன காலங்களில் சிறிய ஆராய்ச்சி நடத்தப்படுகிறது..